காபூல் குண்டுவெடிப்பு எதிரொலி...பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகள் ரத்து!

காபூலில் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து, பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டிகளை ரத்துசெய்துள்ளது ஆஃப்கானிஸ்தான்.

காபுல்

ஆஃப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் அருகே நேற்று காலை, லாரியில் குண்டுகளை நிரப்பிவந்து, தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 80 பேர் உடல் சிதறிப் பலியாகினர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜெர்மனி, பிரான்ஸ் தூதரக கட்டடத்துக்கு மிக அருகே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதரகங்களும் இந்தப் பகுதியில் அமைந்துள்ளன.

இதனிடையே, பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களால் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருப்பதால், பாகிஸ்தானுடன் நடைபெறவிருந்த கிரிக்கெட் போட்டிகளை ரத்துசெய்துள்ளது ஆஃப்கானிஸ்தான். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, பதற்றம் நிலவிவந்த இரு நாட்டு உறவுகளுக்குள்ளும் இந்த குண்டுவெடிப்பு மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!