பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுகிறதா அமெரிக்கா..?: முடிவை இன்று மாலை அறிவிக்கிறார் ட்ரம்ப்! | US to withdraw from 'Paris Climate':Trump will announce this evening!

வெளியிடப்பட்ட நேரம்: 14:29 (01/06/2017)

கடைசி தொடர்பு:15:02 (01/06/2017)

பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுகிறதா அமெரிக்கா..?: முடிவை இன்று மாலை அறிவிக்கிறார் ட்ரம்ப்!

பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும் எனத் தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று மாலை அறிவிப்பதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்


உலகம் மாசடைந்து வருவதைத் தடுக்க, உலக நாடுகளுடன் இணைந்து ஐநா சபை ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், கரியமில வாயுவின் வெளிப்பாட்டை ஒவ்வொரு நாடும் குறைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதற்குப் பல நாடுகளும் ஒப்புதல் தெரிவித்துவந்த நிலையில், தற்போது அமெரிக்கா வெளியேறப்போகிறது என்ற தகவல்கள் வெளியாகிவருகின்றன.


பாரீஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு, ஒபாமாவின் ஆட்சியில் ஒன்றாகவும்  ட்ரம்ப்பின் ஆட்சியில் வேறொன்றாகவும் திசைதிரும்பிவருகிறது. ஒபாமா ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால், ட்ரம்ப் பதவியேற்ற நாளிலிருந்தே ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிப்பதில்லை என்ற முடிவிலேயே இருந்துவருகிறார்.


தற்போது, இன்று காலை ட்ரம்ப் தன் ட்விட்டர் பக்கத்தில், ‘பாரீஸ் ஒப்பந்தத்தில் என் முடிவுகுறித்து இன்று மாலை 3 மணியளவில் தெரிவிப்பேன். அமெரிக்காவை மேலும் உயர்த்துவோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.