Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அசால்டாக பாம்பை பிடித்த சிங்கப்பூர் மார்டன் பாம்பாட்டிகள்!

சிங்கப்பூரில் டெஸ்கர் சாலையில் காருக்குள் பதுங்கியிருந்த ஒரு மீட்டர் நீள பாம்பை இளம் விலங்கு மீட்பு அதிகாரிகள் வெளியே எடுத்த காட்சி சோஷியல் மீடியாவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

snake rescued
 

சிங்கப்பூரிலுள்ள டெஸ்கர் சாலையில் தன் காரை நிறுத்திவிட்டு வணிக வளாகத்தினுள் சென்றுள்ளார். அவர் திரும்பி வருவதற்குள் அருகிலிருந்த சாக்கடையிலிருந்து ஒரு மீட்டர் நீள பாம்பு அவர் காரின் முன் சக்கரத்தினுள் பதுங்கிக் கொண்டது. இதை அருகிலிருந்த நபர் கவனித்துக் காருக்கு சொந்தக்காரரிடம் தெரிவித்துள்ளார். 

 

 

இதைத் தொடர்ந்து ஏகர்ஸ் என்னும் விலங்குகள் மீட்பு அமைப்புக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் விலங்குகள் மீட்பு அமைப்பினர் அங்கு விரைந்துள்ளனர். 20 அந்த அதிகாரிகளைப் பார்த்த பொதுமக்களுக்கு அதிர்ச்சி. காரணம் பாம்பை மீட்க வந்தவர்கள் 20 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண். காருக்குள் பதுங்கியிருந்த பாம்பைச் சாமர்த்தியமாக இருவரும் வெளியே எடுத்து அசத்தி உள்ளனர்.  இந்தக் காட்சியைப் பொதுமக்களில் ஒருவர் வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அவ்வளவுதான் சிறிது நேரத்தில் லைக்ஸ், ஷேர்ஸ் குவிந்துவிட்டன!
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close