Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலக நாடுகளை மிரட்டும் எஸ்-400 ஏவுகணை: இந்தியாவுக்கு வழங்குகிறது ரஷ்யா!

ராணுவத்துக்கு வலுசேர்க்கும் அதி நவீன எஸ்-400 ரக விமான எதிர்ப்பு ஏவுகணையை இந்தியாவுக்காக வழங்க, ரஷ்யா முடிவெடுத்துள்ளது. இரு நாட்டுப் பிரதிநிதிகளும் இதுகுறித்த பேச்சுவார்த்தையில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

மோடி- புதின்


பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறைப் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். இரு நாட்டின் நலனையும் கருத்தில்கொண்டு, 12 ஒப்பந்தங்களில் இந்தியா- ரஷ்யா இணைந்து கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளின் இறுதியில், 'இந்தியாவுக்காக மிகவும் அதி நவீன எஸ்-400 ரக ஏவுகணையை வழங்கத் தயார்' என ரஷ்யா அறிவித்துள்ளது.


இந்த புதிய ரக ஏவுகணையின்மூலம் 400 கி.மீ தொலைவிலிருந்து தாக்க வரும் ஏவுகணை மற்றும் விமானங்களைக் கண்டறிந்து, தாக்கும் திறனுடையது, எஸ்-400.  ஒரே நேரத்தில் 36 இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கும் சிறப்பையும் இந்த ஏவுகணை பெற்றுள்ளது. 
இதுதொடர்பான பேச்சுவார்த்தை வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, எஸ்-400 ரக ஏவுகணையின் தயாரிப்புப் பணிகள் நடைபெறத் தொடங்கிவிட்டன என்றும் இந்தியாவுக்கு அளிக்கும் நாள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் ரஷ்ய துணைப் பிரதமர் டிமிட்ரி ரோகோகோசின் அறிவித்துள்ளார்.


மேலும், ஆயுத, ஏவுகணை தொடர்பான ஒப்பந்தம், கடந்த வருடமே மோடி- புதின் தலைமையில் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement