கூடங்குளத்தில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் அணு உலைகள்: மோடி, புதின் கையெழுத்து...!

அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட நான்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதையடுத்து, நேற்று ரஷ்யாவில் அந்நாட்டு அதிபர் புதினை, பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது, இரு நாடுகளிடையே ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Modi - Putin


குறிப்பாக, கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகள் அமைக்க ஒப்பந்தமிடப்பட்டது. இந்நிலையில், 50,000 கோடி ரூபாய் மதிப்பில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 5 மற்றும் 6-வது அணு மின் நிலையம் அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவற்றில் 50 சதவிகிதம், அதாவது பாதி பணத்தை, ரஷ்யா தரவுள்ளது. முக்கியமாக, இந்தப் புதிய அணு உலைகள் மூலம் 4,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, ரஷ்யாவில் இன்று நடந்த சர்வதேச பொருளாதாரக் கருத்தரங்கில், மோடி மற்றும் புதின் கலந்து கொண்டனர். இதில் பேசிய மோடி, "இந்தியா வேகமாக வளர்ந்து வரும் ஒரு நாடு. உலகம் முழுவதும் இருக்கும் கிரெடிட் ஏஜென்சி நிறுவனங்கள், இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடு என்றுதான் கூறியுள்ளனர். இந்தியா - ரஷ்யா இடையே அடிப்படை நம்பிக்கை மற்றும் ஆழமான புரிதல் உள்ளது. ரஷ்யாவில் பாலிவுட் மிகவும் பிரபலம்" என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!