வெளியிடப்பட்ட நேரம்: 16:04 (05/06/2017)

கடைசி தொடர்பு:16:04 (05/06/2017)

கத்தார் உறவைத் துண்டித்த நாடுகள்! அதிர்ச்சி காரணம்

கத்தார் நாட்டுடனான அத்தனை தொடர்புகளையும் துண்டிப்பதாக, சவுதி அரேபியா, ஐக்கிய அரேபிய நாடுகள், எகிப்து, மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

கத்தார்

கத்தார் நாடு தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி, சவுதி அரேபியா, ஐக்கிய அரேபிய நாடுகள், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள்,  தூதரகத் தொடர்புகள் உள்பட கத்தாருடனான அத்தனை தொடர்புகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த நான்கு நாடுகளுடனான அத்தனை உறவுகளிலிருந்தும் நீங்குமாறு கத்தாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கத்தார் நாட்டின் விமானங்கள், கப்பல்கள் அனைத்தும் இன்னும் இரண்டு வார காலத்தில் வெளியேற வேண்டும் என பஹ்ரைன் உத்தரவிட்டுள்ளது.

இனிவரும் காலங்களில், கத்தார் நாட்டின் எந்தவொரு விமானமோ, கப்பலோ மேற்கூறிய நான்கு நாடுகளுக்கு வர அனுமதி இல்லை. தீவிரவாதத்திலிருந்து தங்கள் நாடுகளைப் பாதுகாக்க, கத்தார் வழியான எல்லைகளையும் மூடிவிட்டதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவின்  தலைமையில் ஒன்றிணைந்துள்ள அரேபிய நாடுகள், தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கத்தார் ஐஎஸ்ஐஎஸ், அல்கொய்தா போன்ற அமைப்புகளுக்கு உதவி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.