116 பேருடன் மாயமானது மியான்மர் ராணுவ விமானம்!

மியான்மரில் 116 பேருடன்  சென்ற ராணுவ விமானம் திடீரென்று தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானதாக முதற்கட்டத் தகவல் வெளியாகி உள்ளது. மியான்மரின் ராணுவ தளபதி இந்த செய்தியை உறுதிப்படுத்தி உள்ளார். விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

myanmer flight

மாயமான விமானத்தில் விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பயணம் செய்துள்ளனர். இன்று மதியம் 1.30 மணியளவில் விமானத்தின்  தகவல்தொடர்பு  துண்டிக்கப்பட்டுள்ளது. மியான்மரின் மையக் நகருக்கும் யங்கூன் நகருக்கும் இடையில் 18,000 அடிக்கு மேல் பறந்து கொண்டிருந்த போது விமானம் காணாமல் போனாதாக கூறப்படுகிறது. விமானத்தை தேடுவதற்கு நான்கு கடற்படைக் கப்பல்கள் மற்றும் இரண்டு விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!