திருமுருகன் காந்தி மீதான 'குண்டாஸ்': ஐ.நா.,வில் எழுப்பப்பட்ட கேள்விகள்!!

thirumurugan gandhi

திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு, ஐ.நா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் மூன்று பேர் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். அனுமதியின்றி மெரினாவில் போராட்டம் நடத்தியதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் கடந்த 29ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஐ.நா சபை மனித உரிமை 35-வது கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. ஓப்பன் ஸ்டேட்மென்ட் முடிந்தவுடன், அரசியல் சாரா அமைப்புகள் சார்பில் விவாதம் நடந்தது. தமிழக தலைநகர் சென்னையில், மே 17 இயக்கத்தின் சார்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டபோது, நினைவேந்தல் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்தும் அக்கூட்டத்தில் பேசப்பட்டது.

ஒரு நிமிட அவகாசத்தில் திருமுருகன் காந்திக்கு ஆதரவாக மூன்று உறுப்பினர்கள் இந்த பிரச்னையை எழுப்பினர். இது பெரும் விவாதங்களை கிளப்பும் என தெரிகிறது. மத்திய அரசு சார்பிலும், தமிழக அரசு மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் தரப்பிலும் பதிலளிக்க வேண்டிய சூழல் தற்போது உண்டாகியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!