பிரிட்டன் பொதுத்தேர்தல்... அதிர்ச்சியில் தெரசா மே!

ஐரோப்பிய ஒன்றியத்துடன் 44 ஆண்டு காலமாக இருந்துவந்த பிரிட்டன், தற்போது லிஸ்பன் உடன்படிக்கை (EU's Lisbon Treaty ) 50-வது விதியின் சட்டப்படி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதாக அறிவித்தது. இரண்டு வருடங்களில் வர்த்தகம், இடம்பெயர்வு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவை சார்ந்த சட்ட நடைமுறைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு, முழுவதுமாக பிரிட்டன் விலகும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வலிமை வாய்ந்த நாடாக நிலையான தலைமையுடன் தனித்து இயங்குவதற்காக பிரிட்டன் பொதுத்தேர்தலை அறிவித்தது.

இங்கிலாந்து பாராளுமன்றத்தின் ஆட்சிக் காலம் 2020 ஆம் ஆண்டுதான் நிறைவடைகிறது. ஆனால், ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையைத் தொடர்ந்து, பிரதமர் தெரசா மே-யின் அறிவிப்பின்படி நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது தெரசா மேயின் கன்சர்வேடிவ் கட்சி மற்றும் தொழிற்கட்சிகள் போட்டியிட்டன.


அதன்படி, இங்கிலாந்தின் 650 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. தெரசா மேயின் கன்சர்வேடிவ் கட்சி மற்றும் தொழிற்கட்சிகள் போட்டியிட்டன. வாக்குப் பதிவு முடிந்த உடனேயே, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆனால், தேர்தல் முடிவுகள் தெரசா மே-வுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.


தற்போது வரை வெளியான முடிவுகளின்படி கன்சர்வேடிவ் கட்சி 314 தொகுதிகளிலும், தொழிற்கட்சி 266 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. ஆனால், பெரும்பான்மைக்கு 326 இடங்கள் வேண்டும். இதனால், அங்கு தொங்கு பாராளுமன்றம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தேர்தலை அறிவித்தது தெரசாவின் தவறான முடிவு என்றும் விமர்சனம் வைக்கப்பட்டுவருகிறது. மேலும், வெளியாகியுள்ள முடிவுகளில் கன்சர்வேடிவ் கட்சி 15 தொகுதிகளிலும், தொழிற்கட்சி 28 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!