இங்கிலாந்தை அதிரவைக்கும் அடுத்தடுத்த சம்பவங்கள்! பொதுமக்கள் சிறைப்பிடிப்பால் பதற்றம் | unidentified armed man "holds job centre staff'

வெளியிடப்பட்ட நேரம்: 14:59 (09/06/2017)

கடைசி தொடர்பு:15:18 (09/06/2017)

இங்கிலாந்தை அதிரவைக்கும் அடுத்தடுத்த சம்பவங்கள்! பொதுமக்கள் சிறைப்பிடிப்பால் பதற்றம்

இங்கிலாந்து நாட்டின் பைகெர் பகுதியில் உள்ள வேலைவாய்ப்பு மையத்தின் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களை, மர்ம நபர் ஒருவர் கத்திமுனையில் சிறைப்பிடித்துள்ளார். 

இங்கிலாந்து நாட்டின் பைகர் பகுதியில் உள்ள கிளிப்போர்டு சாலையில், வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ளது. அலுவலகம் அமைந்துள்ள வளாகத்துக்குள் இந்திய நேரப்படி 12 மணி அளவில் கத்தியுடன் நுழைந்த நபர், அங்குள்ள பணியாளர்கள் மற்றும் பொதுமக்களைச் சிறைபிடித்தார். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அந்த மர்ம நபர் சிறைப்பிடித்துள்ளார். காவல்துறை, மர்ம நபரிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றது.

மேலும், அந்தப் பகுதி முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இதுவரையில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று நம்பப்படுகிறது. சிறைப்பிடித்தவரின் நோக்கம் என்ன என்றும் அவர் யார் என்பதுகுறித்தும் தகவல்கள் வெளிவரவில்லை. ஏற்கெனவே, இங்கிலாந்து நாட்டில், கடந்த 10 நாள்களுக்குள் இரண்டு முறை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.