Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'டங்கல்' படத்தைப் பார்த்து வியந்த சீன அதிபர்...!

மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகத் வாழ்க்கையை தழுவி, கடந்தாண்டு இந்தியாவில் வெளியான திரைப்படம் 'டங்கல்'. நிதேஷ் திவாரி இயக்கிய இந்தப் படம், இந்தியா மட்டுமின்றி மே 5ஆம் தேதி சீனாவிலும் வெளியானது.  அமீர்கானின் படம் சீனாவில் வெளியாவது இது மூன்றாவது முறையாகும்.  வெளியானது முதல் அங்கு பாக்ஸ் ஆஃபிஸில் பல்வேறு சாதனைகளை டங்கல் படைத்து வருகிறது.

Dangal


குறிப்பாக, 1,090 கோடி ரூபாயை இந்தப் படம் வசூல் செய்து சாதித்துள்ளது. சீனாவில் ஹாலிவுட் அல்லாத வெளிநாட்டு படம் ஒன்றின் அதிக வசூல் இதுதான்.  இதனிடையே, இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், பாகிஸ்தான் பங்கேற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கஜகஸ்தானில் நடந்தது.


அப்போது அங்கு இந்தியப் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது 'டங்கல்' படத்தை பார்த்து ரசித்ததாக, மோடியிடம் ஜின்பிங் கூறியுள்ளார். மேலும், இந்திய சினிமாக்கள் குறித்து ஜின்பிங் புகழ்ந்ததாக  தகவல் வெளியாகியுள்ளது. 
'டங்கல்' படம் விரைவில் ஜப்பான் மற்றும் வட அமெரிக்காவில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement