Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஈரான் தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் பலி!

ஈரான் நாடாளுமன்றத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர், பாதுகாப்பு படையினர் தாக்குதலில் பலியாகியுள்ளார்.

ஐ.எஸ்

ஈரானில் ஜூன் 7-ம் தேதி நாடாளுமன்றத்தில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. நாடாளுமன்ற வளாகத்தில் நுழைந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். மேலும் புரட்சியாளர் கோமேனியின் நினைவிடத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டது. தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் நினைவிடமும் கடுமையாக சேதமடைந்தது. இதில் 12 பேர் பலியாகினர். 39 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கண்டனங்களை பதிவு செய்தனர். ஐ.எஸ் இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

இதனிடையே ஈரான் பாதுகாப்பு படையினர் நேற்று தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரை சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் இது தொடர்பாக 43 பேரை கைது செய்துள்ளதாகவும் ஈரான் பாதுகாப்பு துறை அமைச்சர் மஹ்மூத் அலாவி தெரிவித்துள்ளார். ஈரானில் ரமலான் மாதம் தொடங்கியதிலிருந்து பல்வேறு கட்டத் தாக்குதல்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement