Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெர்மனி ரயில்நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: அப்பாவி மக்கள் படுகாயம்!

ஜெர்மனியின் முனிச் நகரிலுள்ள ஒரு ரயில் நிலையத்தில், மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸார் உட்பட பலர் காயமடைந்தனர்.

முனிச் தாக்குதல்

மர்ம நபர் ஒருவர், ஜெர்மனியின் பவேரியா மாகாணத் தலைநகர் முனிச்சிலுள்ள ரயில் நிலையம் ஒன்றில் அத்துமீறி நுழைந்து துப்பாக்கியால் சுட்டார். புறநகர் ரயில் நிலையத்தில் நடந்த இந்தத் திடீர் தாக்குதலால் பயணிகள் நிலைகுலைந்தனர். இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பெண் போலீஸார் ஒருவர் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொதுமக்களில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

புறநகர் ரயில் நிலையத்தின் சுரங்கப் பாதையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மர்ம நபர், பொதுமக்கள்மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும்போதே, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், தாக்குதல் நடத்திய அந்த நபரின் தலையில் சுட்டனர். காயமடைந்த அவர், தற்போது போலீஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளார். தீவிரவாதத் தாக்குதல் இல்லை என்பதை மட்டும் கூறும் முனிச் நகர் போலீஸார், அந்த மர்ம நபரிடம் விசாரணை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close