9 ஆயிரம் கோடி கடனுக்கு விஜய் மல்லையா சொல்லும் பதில் இதுதான்..!

இந்தியாவிலுள்ள பொதுத்துறை வங்கிகளிடமிருந்து 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாத மல்லையா, இங்கிலாந்தில் அடைக்களம் புகுந்தார். வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்குத் தப்பிச்சென்ற விஜய் மல்லையாவைக் கைதுசெய்து அழைத்துவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது இந்திய அரசு. 

Vijay Mallya


 ஏப்ரல் மாதம் கைதுசெய்யப்பட்ட விஜய் மல்லையா,  ஜாமீனில் வெளிவந்தார். இந்த நிலையில், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு, லண்டன் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த வழக்கில், அவர் லண்டன் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அப்போது மல்லையா கூறுகையில், "என் மீதான அனைத்துக் குற்றச்சாட்டையும் நான் மறுக்கிறேன். நான் எந்த நீதிமன்றத்தையும் ஏமாற்றவில்லை" என்றார்.


இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 6 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. அன்றைய தினமும் மல்லையா ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, 'தன் மீதான வழக்கு விசாரணைக்கு வரும்போது, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்குத் தடை விதிக்க வேண்டும்' என்று மல்லையா கோரிக்கை விடுத்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!