பால் தட்டுப்பாட்டைச் சமாளிக்க கத்தாரின் பலே திட்டம்!

கத்தாரில் நிலவும் பால் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, 4,000 மாடுகளை விமானம்மூலம் கத்தாருக்கு இறக்குமதிசெய்யத் திட்டமிட்டுள்ளது கத்தார் அரசு.

qatar crisis

 

கத்தார் நாடு, தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி சவுதி அரேபியா, ஐக்கிய அரேபிய நாடுகள், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள், தூதரகத் தொடர்புகள் உள்பட கத்தாருடனான அத்தனை தொடர்புகளையும் துண்டிப்பதாக, ஜூன் 5 ஆம் தேதி அறிவித்தன. இந்த அறிவிப்பால், கத்தாரில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அந்த நாட்டு அரசு கூறிவருகிறது. 

தடை உத்தரவைத் தொடர்ந்து, உணவுப் பொருள்களுக்கு அங்கு தட்டுப்பாடு நிலவிவருகிறதாம். குறிப்பாக, பால் மற்றும் பால் பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவிவருவதால், மாடுகள் இறக்குமதியில் அந்த நாட்டு அரசு தீவிரம்காட்டிவருகிறது. கத்தாருக்கு சவுதியில் இருந்துதான் பால் இறக்குமதி செய்யப்படுவது வழக்கம். 


பால் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிலிருந்து 4,000 மாடுகளை வாங்கியுள்ளது கத்தார் அரசு. ’பவர் இன்டர்நேஷனல் ஹோல்டிங்’ என்னும் நிறுவனம் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளது.  அவற்றை கப்பல்மூலம் கத்தாருக்குக் கொண்டுவர முதலில் இந்த நிறுவனம் முடிவுசெய்துள்ளது. பின்னர், விமானம்மூலம் மாடுகளைக் கொண்டுவர முடிவுசெய்யப்பட்டுள்ளது. மாடுகளைக் கத்தாருக்குக் கொண்டுவர, 60 விமானங்களைப் பயன்படுத்த உள்ளனர். ’இவ்வளவு மாடுகளை விமானம்மூலம் இறக்குமதி செய்வது இதுவே முதன்முறை. இது ஒரு மிகப்பெரிய முயற்சி’ என்று தெரிவித்துள்ளார், பவர் இன்டர்நேஷனல் ஹோல்டிங் நிறுவனத் தலைவர் மௌதஸ் அல் கய்யாத்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!