Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஊடகங்கள் குறித்து மீண்டும் ட்விட்டரில் பொங்கும் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், போலிச் செய்தி வெளியிடும் ஊடகங்களைச் சாடியுள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடப்பதற்கு முன், ஜனநாயகக் கட்சியின் ஹிலரி கிளின்டனுக்கும்  மற்றும் குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப்புக்கும் இடையே கடும் வாக்குவாதப் போட்டி நடந்தது. அப்போது, கிட்டத்தட்ட அனைத்து அமெரிக்க ஊடகங்களும் ட்ரம்ப்புக்கு எதிராகவே கருத்துகளை உமிழ்ந்துவந்தன. 

அப்போது ட்ரம்ப், 'எனக்கு எதிராக ஊடகங்கள் செயல்பட்டுவருகின்றன. ஆனால், சமூக வலைதளம்மூலம் நான் மக்களைச் சென்றடைவேன்' என்று சூளுரைத்தார். அதேபோல தேர்தல் கணிப்புகள் அனைத்தையும் தவறென்று நிரூபித்து, ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அரியணையில் ஏறினார். 

ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்ற பிறகும், மீடியாக்கள் அவரை வசைபாடுவதை நிறுத்தவில்லை. பத்திரிகைகளுக்கு ஏற்றார்ப்போல அவரும் சர்ச்சைக்குரிய கருத்துகளையே கூறிவந்தார்.

இந்த நிலையில், மறுபடியும் ஊடகங்கள் பற்றி அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  'போலிச் செய்திகள் உச்சத்தில் இருக்கின்றன. என்னைப் பற்றிய தவறான செய்திகளுக்கு ஊடகங்களிடமிருந்து வர வேண்டிய மன்னிப்பு எங்கே? இந்தப் போலிச் செய்தி ஊடகங்கள், வரலாற்றில் எப்போதும் இவ்வளவு இழிவாகவும் தவறாகவும் இருந்ததில்லை. வெறுப்பை உமிழ்வதற்காகத் தவறான செய்திகளை வேண்டுமென்றே திணிக்கின்றனர். இது மிகவும் வருத்தமளிக்கிறது' என்று பதிவிட்டுள்ளார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement