Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உடல் பருமன், அதிக எடை: முதலிடம் எந்த நாடு தெரியுமா?

உடல் பருமன், அதிக எடை காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துவருவதையொட்டி, நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் என்ற அமைப்பு, பல்வேறு நாடுகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வில், உலக மக்கள் தொகையில் 10 சதவிகிதத்தினர் உடல் பருமன், அதிக எடைகொண்டவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த ஆய்வில், குண்டான உருவம்கொண்ட குழந்தைகள் அதிகம் உள்ள நாடுகளில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது. முதலிடத்தைச் சீனா பிடித்துள்ளது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களைச் சேர்த்து உடல் பருமன் அதிகம் உள்ளவர்களைக்கொண்ட நாடுகள் பட்டியலில், முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.  

குண்டாக இருப்பது குற்றம் இல்லை என்றாலும், அதனால் ஏற்படும் உடல் பிரச்னைகள் ஏராளம் என்பது ஏற்றுக்கொள்ளவேண்டிய உண்மை. உயிரிழப்புகளுக்கும் உடல் பருமன் பிரச்னையாக இருக்கிறது. 

உடல் பருமனடைவதற்குக் காரணம், பெரும்பாலும் உணவுப் பழக்கம்தான் என்று சொல்லப்படுகிறது. துரித உணவு கலாசாரமும், பிட்சா, பர்கர் போன்ற உணவுகளும் உடல் பருமனுக்கு மிக முக்கிய காரணங்களாக உள்ளன. அமெரிக்காவில், பெரும்பாலும் இது போன்ற உணவுகள் உட்கொள்வதால்தான் உடல் பருமன் அதிகம் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement