ஐரோப்பாவின் முக்கியத் தலைவர்களைச் சந்தித்தார் பிரான்ஸ் அதிபர்!

பிரான்ஸ் நாட்டு அதிபராகப் பதவியேற்றுள்ள இமானுவேல் மேக்ரன், ஐரோப்பாவின் முக்கியத் தலைவர்களைச் சந்தித்துப் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். 

Emmanuel Macron

இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கான ப்ரெக்சிட் குறித்தான பேச்சுவார்த்தை இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ள நிலையில், பிரான்சு அதிபர், டட்சு, எஸ்டோன்சியா மற்றும் ஸ்பெயின் நாட்டுத் அரசியல் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, ஐரோப்பா குறித்து அவரின் அஜெண்டா, ராணுவ மற்றும் பாதுகாப்புக் குறித்து அவரின் நிலைப்பாடு, பருவ நிலை மாற்றம் குறித்து சர்வதேச சூழலில் நிகழ்ந்த மாற்றங்கள் மற்றும் அகதிகள் விஷயம் போன்ற பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக பிரான்ஸ் அரசு தரப்பு கூறுகின்றது. 

மேக்ரன், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவாளர். அவர், நாடுகளுக்கு இடையில் ஒன்றிணைந்த பட்ஜெட் குறித்து கூட பேசிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!