புது நிலைப்பாடு எடுத்த ட்ரம்ப்... அமெரிக்கா-கியூபா இடையே மீண்டும் பனிப்போர் மூளுமா?

கியூபா தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். 

Donald Trump

அமெரிக்கா - கியூபா இடையில் பல ஆண்டுகளாகப் பனிப் போர் நீடித்து வந்த நிலையில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஒபாமா, கடந்த 2014-ம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தைக்குப் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தார். அதன் மூலம், கியூபாவில் அமெரிக்கத் தூதரகம் அமைத்தது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், இப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் ட்ரம்ப் இதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். 

இது குறித்து அவர், 'அமெரிக்கர்களாகிய நாம், கியூப மக்கள் விடுதலைக்காகத் துணை நிற்போம். கியூபா விஷயத்தில் முன்னர் ஆட்சியிலிருந்த அரசாங்கம் எடுத்த நிலைப்பாட்டையும் ஒப்பந்தங்களையும் நான் ரத்து செய்கிறேன். கியூபாவில் அரசியல் கைதிகள் விடுவிப்பது, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் நடத்தப்படுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை அதன்  மீதிருக்கும் எந்த ஒரு நிலைப்பாடும் மாறாது.' என்று அதிர்ச்சி செய்தியைக் கூறியுள்ளார்.

ட்ரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கையால், அமெரிக்க மக்கள் கியூபாவுக்குச் செல்வது போன்ற விஷயங்களில் பெரும் சிரமம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!