வெளியிடப்பட்ட நேரம்: 17:27 (17/06/2017)

கடைசி தொடர்பு:17:27 (17/06/2017)

கனடா பிரதமரை புகழ்ந்து தள்ளிய ட்ரம்ப்! இதுதான் காரணம்

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்து அவருக்குப் பாராட்டுகளை குவித்து வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.

ட்ரம்ப்- ட்ரூடே

சர்வதேச அளவில் பலராலும் பாராட்டப்பட்டு வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே, கனடாவின் ராணுவ பட்ஜெட்டை அதிகரித்தற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். கனடாவின் ராணுவ பட்ஜெட்டில், அடுத்த பத்தாண்டுக்கான பாதுகாப்புக்கான நிதியை 70% வரை உயர்த்தியது சிறப்பான செயல் என்கிறார் ட்ரம்ப். மேலும், இதன் மூலம் அமெரிக்கா- கனடா நாடுகளின் இடையேயான உறவு பலம் பெற்றிருப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

ட்ரூடே-வை ட்ரம்ப், தொலைபேசியின் வாயிலாகப் பாராட்டியுள்ளார் என வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ செய்தி தகவல் மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தொடர் வற்புறுத்தலின் பேரிலேயே எப்போதும் இல்லாத அளவுக்கு கனடா தனது பாதுகாப்பு நிதியை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.