Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ட்ரம்ப் முடிவுக்கு கியூபா கண்டனம்!

கியூபா தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் முடிவுக்கு கியூபா அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ட்ரம்ப்

அமெரிக்கா - கியூபா இடையில் பல ஆண்டுகளாகப் பனிப் போர் நீடித்து வந்த நிலையில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, கடந்த 2014 ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தார். அதன் மூலம், கியூபாவில் அமெரிக்கத் தூதரகம் அமைத்தது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், தற்போது அமெரிக்க அதிபராக உள்ள ட்ரம்ப் அதற்கு எதிரான நிலைபாட்டை எடுப்பதாக அறிவித்தார். இதனால் மீண்டும் கியூபா-அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்படும் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் எடுத்துள்ள முடிவுக்கு கியூபா அரசாங்கம் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. ட்ரம்ப்பின் நிலைப்பாடு முற்றிலும் ஒருதலைப் பட்சமானது என கியூபா தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே அமெரிக்காவுடன் இருக்கும் பிரச்னைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு கியூபா எப்பொழுதுமே ஆர்வத்துடன் தான் இருக்கின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement