Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

19 வயது சிரியா அகதியை கெளரவப்படுத்தியது யுனிசெஃப்!

உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு சிரியாவைச் சேர்ந்த அகதியான முசூன் அல்மெலெஹான் (19) யுனிசெஃபின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முசூன் அல்மெலெஹான்

ஜூன் 20 ஆம் தேதி (இன்று) உலக அகதிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு சிரியா அகதி முசூன் அல்மெலெஹான், யுனிசெஃபின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். 19 வயதான இவர் யுனிசெஃபின் இளம் தூதராவார்.

2013 ஆம் ஆண்டு சிரியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு, 16 வயது சிறுமி முசூன் அல்மெலெஹான் அகதியாக ஜோர்டன் வந்தார்.  அவர் புலம் பெயர்ந்தவர்களின் கல்வி குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். 'சிறு வயதில் இருந்தபோதே கல்விதான் எனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று தோன்றியது. நான் சிரியாவில் இருந்து வெளியேறியபோது எனது புத்தகங்களை மட்டுமே எடுத்துக் கொண்டேன்' எனக் கூறியுள்ளார் முசூன் அல்மெலெஹான்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement