அதிகரிக்கும் உயிரிழப்பு! ஏமன் நாட்டை அச்சுறுத்தும் காலரா நோய்

ஏமன் நாட்டில் காலரா நோய் காரணமாக கடந்த 2 மாதங்களில் சுமார் 1000 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யேமன்

ஏமனில் தொடர்ந்து ஹவுதி தீவிரவாதிகளால் தொடர்ந்து உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. ஏமன் தலைநகர் சானாவையும் ஹவுதி படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதனால், ஏமன் நாட்டின் சுகாதார கட்டமைப்பு கடுமையாக பாதிப்படைந்துள்ளது. மேலும், அங்கு மருத்துவமனைகளும் முறையாக செயல்படாமல் உள்ளன. இதனால் அங்குள்ள மக்கள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில், ஏமனில் கடந்த 2 மாதங்களில் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 27-ல் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் காலரா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் 1,146 பேர் இறந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஏமன் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்க அதிபர் விசா கட்டுப்பாடு விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!