ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு: 20 பேர் பலி; 50 பேர் படுகாயம்

தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பில் 20 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 


ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தின் தலைநகராக லஷ்கர் கா இருந்து வருகிறது. லஷ்கர் கா பகுதியிலுள்ள காபூல் வங்கி அருகில் இன்று காலை 12 மணியளவில் கார் குண்டு வெடித்தது. இந்தக் குண்டு வெடித்ததில் வங்கி வாயிலில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் பலியாயினர். இந்த விபத்தில் 20 பேர் பலியாயினர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்தக் குண்டு வெடிப்பைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தனது ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று தெரிகிறது.

இதுவரையில் ஆப்கானிஸ்தானில் 8,400 அமெரிக்க ராணுவ வீரர்கள் இறந்திருக்கின்றனர். மேலும் 5,000 வீரர்களை அமெரிக்கா அனுப்பும் என்று தெரிகிறது. இந்தக் குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரையில் எந்தத் தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!