இந்தியப் பெருங்கடலைக் கண்காணிக்கத் தயாராகும் இந்திய கடற்படை! | US approves sale of 22 guardian unmanned drones to India

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (23/06/2017)

கடைசி தொடர்பு:14:24 (23/06/2017)

இந்தியப் பெருங்கடலைக் கண்காணிக்கத் தயாராகும் இந்திய கடற்படை!

அமெரிக்க நிறுவனத்திடமிருந்து விமானி இல்லாமல் பறக்கும் 22 போர் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா செய்துள்ள ஒப்பந்தத்துக்கு, அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது.

கோப்புப்படம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறைப் பயணமாக ஜூன் 25-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். அப்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்க உள்ளார். முன்னதாக, இந்தியக் கடற்படைக்குப் புதிதாக ஆளில்லாமல் பறக்கும் திறன்கொண்ட போர் விமானங்களை வாங்குவதற்கு அமெரிக்க நிறுவனத்திடம் இந்தியா ஒப்பந்தம் போட்டிருந்தது. அந்த ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அரசு தற்போது அனுமதியளித்துள்ளது.

சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், ஆளில்லாமல் ரிமோட் கன்ட்ரோல் மூலம் பறக்கும் 22 போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தமிடப்பட்டுள்ளது. அந்த விமானங்களைக்கொண்டு இந்தியப் பெருங்கடல் பகுதிகளைக் கண்காணிக்க, இந்திய கடற்படை முடிவுசெய்துள்ளது. ஆளில்லாமல் பறக்கும் போர் விமானங்களை, 'நேட்டோ' அதிகார அமைப்பில் இல்லாத ஒரு நாடு வாங்குவது இதுவே முதல்முறை.