வெளியிடப்பட்ட நேரம்: 15:16 (23/06/2017)

கடைசி தொடர்பு:15:35 (23/06/2017)

அமெரிக்க- மெக்சிகோ எல்லையில் சோலார் சுவர்: ட்ரம்ப்பின் புதிய திட்டம்!

அமெரிக்கா- மெக்சிகோ இடையே ‘சோலார் சுவர்’ அமைக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ட்ரம்ப்

மெக்சிகோ நாட்டினர் அமெரிக்காவினுள் நுழைவதைத் தடுக்கும் பொருட்டு இப்புதிய திட்டத்தை ட்ரம்ப் அறிவித்துள்ளார். தனது தேர்தல் அறிவிப்பின் அடிப்படையில் தனது வாக்குறுதியை நிறைவேற்ற உள்ளார் ட்ரம்ப். தற்போது தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் இந்த சோலார் சுவர் கட்டும் பணியைத் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர்.

போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோதமாக நாட்டினுள் நுழைபவர்கள் போன்றவற்றைத் தடுக்க உயரமான சுவர் எழுப்பி அதில் சூரிய ஒளித் தகடுகள் பதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 2,000 மைல் தூரத்துக்கு 6,500 கோடி ரூபாயில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், சுவர்களில் பதிக்கப்படும் சூரிய ஒளித் தகடுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளனர். 

இதன்மூலம், அமெரிக்க- மெக்சிகோ எல்லையிலுள்ள இச்சுவரின் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை அருகிலுள்ள நிறுவனங்களுக்கு விற்பனை செய்து லாபம் ஈட்டவும் முடிவு செய்துள்ளது ட்ரம்ப் அரசாங்கம்.