எமிரேட்ஸ் இளவரசிகளுக்கு தண்டனை விதித்து அதிரடி காட்டிய பெல்ஜியம் நீதிமன்றம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இளவரசிகள் எட்டு பேருக்கு மனித உரிமை மீறல் குற்றத்துக்காக சிறைத் தண்டனை வழங்கி அதிரடி காட்டியுள்ளது பெல்ஜியம் நீதிமன்றம்.

Emirate Princesses
 

தற்போது அபுதாபியை ஆளும் அல்-நஹியான் அரசக்குடும்பத்தைச் சேர்ந்த ஷிக்கா ஹம்டா அல்-நஹியான் என்னும் பெண்ணும் அவரின் ஏழு மகள்களுக்கும்தான் பெல்ஜியம் நீதிமன்றம் சிறை வழங்கியுள்ளது. அதுவும் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் தொடரப்பட்ட  வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

பெல்ஜியத்தில் ஆடம்பர ஹோட்டல் ஒன்றில்  பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பணியாட்களை மனிதநேயமற்று நடத்திய குற்றத்துக்காக எட்டு இளவரசிகளுக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 15 மாதம் சிறைத் தண்டனையுடன்  185,000 டாலர் அபராதம் செலுத்தவும் பெல்ஜியம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!