Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பின்வாங்கியது ஐஎஸ் ; மொசூல் நகரில் ரம்ஜான் உற்சாகக் கொண்டாட்டம்!

டந்த 2014-ம் ஆண்டு, ஈராக்கின் மொசூல் நகரைக் கைப்பற்றிய ஐஎஸ் இயக்கத்தினர், அதைத் தங்கள் கோட்டையாக்கிக்கொண்டனர். அவர்களிடமிருந்து மொசூல் நகரைக் கைப்பற்ற அரசுப் படையினர் தொடர்ந்து போரிட்டுவந்தனர். அரசுப் படையினரின் கை ஓங்கியதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன், மொசூல் நகரில் உள்ள 842 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அல் நூரி மசூதியை ஐஎஸ் இயக்கத்தினரே வெடிகுண்டு வைத்துத் தகர்த்தனர்.

ஐஎஸ் இயக்கத்தின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி, இந்த மசூதியில்தான் தன்னை கலீபாவாக அறிவித்துக்கொண்டு மக்களுக்கு உரையாற்றினார். அரசுப் படையினரின் முன்னேற்றத்தைத் தடுக்கும் வகையில், 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைமையான இந்த மசூதி தகர்க்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 

ஐஎஸ் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்தவரை, மொசூல் நகரில் ஈத் தொழுகைக்கு அனுமதி இருந்தாலும் கொண்டாட்டத்துக்கு அனுமதியில்லை. அங்கிருந்து  ஐஎஸ் இயக்கத்தினர் ஓட்டம் பிடித்ததையடுத்து, நேற்று மொசூல் நகரில் ஈத் பண்டிகை களைகட்டியது. குழந்தைகள் புத்தாடை அணிந்து பூங்காக்களில் ஊஞ்சலாடி மகிழ்ந்தனர். ''இப்போதுதான் சுதந்திரமாக ஈத் திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறோம்'' என்று 60 வயது மொசூல் நகரவாசி ஒருவர் தெரிவித்தார்.

தற்போது, 350-க்கும் மேற்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகள், பழைய மொசூல் நகரில் முகாமிட்டுள்ளனர். இந்த நகரில், 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். மக்களை, மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திப் போரிடுவது ஐஎஸ் இயக்கத்தினரின் வழக்கம். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement