இஸ்லாமிய தீவிரவாதத்தை அழிப்போம்... ட்ரம்ப் உறுதி! | Trump-Modi Join Hands to clear Terrorism

வெளியிடப்பட்ட நேரம்: 05:52 (27/06/2017)

கடைசி தொடர்பு:06:52 (27/06/2017)

இஸ்லாமிய தீவிரவாதத்தை அழிப்போம்... ட்ரம்ப் உறுதி!

இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பணியாற்றும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

ட்ரம்ப் மோடி

அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார். அதிபர் ட்ரம்ப்பும், அவரது மனைவி மெலனியாவும் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளித்தனர். இதையடுத்து மோடியும் ட்ரம்ப்பும் வெள்ளை மாளிகையில் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய ட்ரம்ப், "இரு நாடுகளுமே இஸ்லாமிய தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அதை ஒழிக்க முழு மூச்சுடன் பணியாற்றவுள்ளோம். ராணுவ ரீதியாகவும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்" என்று கூறியுள்ளார். மேலும், "இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரை வரவேற்பதில் பெருமைப்படுகிறேன். இந்தியாவின் மக்களையும் கலாசாரத்தையும் பெரிதும் மதிக்கிறேன். இரு நாட்டு அரசியலமைப்பும் 'மக்களுக்காக' என்ற ஜனநாயக வார்த்தைகளில்தான் தொடங்குகின்றன" என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.