உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் வைரஸ் தாக்குதல்!

உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் இணையவழி வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வைரஸ்

கடந்த மே மாதம் சுமார் 150 நாடுகளில் 'ரேன்சம்வேர்' என்ற வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டது. ஹேக்கர்கள் நடத்திய இந்தத் தாக்குதலில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டன. வைரஸ்மூலம் முக்கியமான தகவல்களை முடக்கி, மிரட்டிப் பணம் பறிக்கும் தாக்குதல்தான், இந்த ரேன்சம்வேர் வைரஸ். இந்த வைரஸ் தாக்குதல், உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வட கொரியா இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், நேற்று மீண்டும் ஐரோப்பிய நாடுகளில் ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், உக்ரைன் அரசாங்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் துணைப் பிரதமர் ரோசெங்கோ பாவ்லோவின் அலுவலகக் கணினி, உக்ரைன் சென்ட்ரல் வங்கி, விமான நிலையம் ஆகிய இடங்களில் உள்ள கணினிகளும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. மேலும், பிரிட்டன் விளம்பர நிறுவனம், ரஷ்யாவில் உள்ள ஆயில் நிறுவனம் மற்றும் டென்மார்க்கில் உள்ள கப்பல் நிறுவனம் ஆகியவைகளும் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!