Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'நியூ யார்க் டைம்ஸ் ஒரு ஃபேக் நியூஸ் ஜோக்!' - நேரடியாகத் தாக்கும் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டில் வெளிவரும் பிரபல நாளிதழான 'தி நியூ யார்க் டைம்ஸ்'-ஐ 'தவறான செய்தி பரப்பும் ஒரு ஜோக்கான பத்திரிகை' என்று சாடியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப்

டொனால்ட் ட்ரம்ப்புக்கும் அமெரிக்க ஊடகங்களுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். ஊடகங்கள் ட்ரம்ப்பின் கருத்துகளையும், கொள்கைகளையும் விமர்சனம் செய்து வாதம் வைக்க, அதற்கு ட்ரம்ப் பிரதிவாதம் வைக்க என முடியாத தொடர்கதை அது. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, சுகாதாரம் சம்பந்தமாகக் கொண்டு வந்த 'ஒபாமா கேர் மசோதா'-வை ட்ரம்ப் கிடப்பில் போடப் பார்த்தார். அதற்கான தொடர் நடவடிக்கைகளிலும் ட்ரம்ப் எடுத்து வருகிறார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நியூ யார்க் டைம்ஸ் கட்டுரை வெளியிட்டுள்ளது. இதையடுத்து தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப், 'தோல்வியடைந்து வரும் நியூ யார்க் டைம்ஸ் நாளிதழ் என்னைப் பற்றி தொடர்ந்து தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றது. அந்தச் செய்தி உண்மையா என்பதைக்கூட அவர்கள் பார்ப்பதில்லை. அது தவறான செய்திகளை வெளியிடும் ஜோக்' என்று பதிவிட்டுள்ளார். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement