Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரான்ஸ் அதிபரின் அழைப்பை ஏற்ற டொனால்ட் ட்ரம்ப்!

பிரான்ஸ் தேசிய தினமான 'பேஸ்டில் டே'வின் ராணுவ அணிவகுப்பில் பங்கேற்க, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டார், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

trump macron

பிரான்ஸும் அமெரிக்காவும் நீண்ட காலமாகவே நட்புறவைப் பாதுகாத்துவந்துள்ளது. உலகப் போர் சமயங்களில்கூட இவ்விரு நாடுகளும் இணைந்தே செயல்பட்டன. இந்நிலையில், கடந்த ஜூன் 1-ம் தேதி, பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்த ஒப்பந்தத்தினால் அமெரிக்காவின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக ட்ரம்ப் கூறினார். இதையடுத்து, அமெரிக்காவின் முடிவை கடுமையாக விமர்சித்ததோடு, அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு பிரான்ஸ் வர அழைப்பு விடுத்தார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்.

இதனிடையே, பிரான்ஸ் தேசிய தினமான 'பேஸ்டில் டே'வின் ராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்ள அதிபர் ட்ரம்ப்புக்கும் அவரது மனைவி மெலானியாவுக்கும் அழைப்பு விடுத்தார் மேக்ரான். இந்த அழைப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, அவர் ஜூலை 14-ம் தேதி கொண்டாடப்படும் 'பேஸ்டில் டேவில்' கலந்துகொள்ள பாரீஸ் செல்கிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close