Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரேஸில் அதிபர் மாளிகை மீது தாக்குதல்: போராட்டக்காரர்களின் சதியா?

பிரேஸில் அதிபர் மைக்கேல் தெமரின் மாளிகையின் மீது நேற்று மர்ம கார் ஒன்று தாக்கியதால், அந்த நாட்டில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

பிரேசில் அதிபர்

பிரேஸில் அதிபராகப் பதவி வகித்துவருகிறார் மைக்கேல் தெமெர். ஊழல் குற்றச்சாட்டுகளால் இவர் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால், பல நாள்களாக அதிபர் தெமெர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. அதிபர் பதவியைவிட்டே தெமெர் விலக வேண்டுமென பிரேஸில் நாட்டு மக்கள் போராட்டங்களிலும் வன்முறைத் தாக்குதல்களிலும் ஈடுபடத் தொடங்கினர்.

இந்நிலையில், நேற்று பிரேஸில் அதிபர் மாளிகையின் முன்பக்க நுழைவுவாயில் வழியாக வேகமாக வந்த மர்ம கார் ஒன்று மோதித் தாக்கியது. இதில் சேதம் குறைவென்றாலும், போராட்டக்காரர்களின் சதியா என்ற ரீதியில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வாகனத்தை ஓட்டிவந்தது ஒரு மைனர் சிறுவன் என்றும் கூறப்படுகிறது. தாக்குதல் நடந்த நேரத்தில், அதிபர் வீட்டில் இல்லை என்பதால் பாதுகாப்பாக உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close