Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டும்; இந்தியாவை எச்சரிக்கும் சீனா

'இந்தியா, வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்' என்று சீனா எச்சரிக்கைவிடுத்துள்ளது.

இந்திய ராணுவம் சீனா எல்லைக்குள் நுழைவதாக, கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீனா குற்றம் சாட்டியது. இந்நிலையில், நேற்று பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் லூ காங், 'இந்திய ராணுவத்தினர், விதிமுறைகளை மீறி சிக்கிம் பகுதியிலுள்ள டோங்லாங்கையொட்டிய சீன எல்லைக்குள் ஊடுருவுகின்றனர். எனவே, இந்திய ராணுவத்தைத் தங்கள் பகுதிக்குத் திரும்புமாறு உடனடியாக உத்தரவிடுவது நல்லது. இதை இத்தோடு முடிக்க இதுதான் நிபந்தனை. மேலும், அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு இதுவே முன் நிபந்தனையாக இருக்கும்' என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்திய ராணுவம் சீன எல்லைக்குள் நுழைந்த புகைப்படத்தைக் காண்பித்தார். அந்தப் புகைப்படத்தை வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கான இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சீனாவின் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கலோனஸ் லி கியான், 'பூடான் பகுதியில் சீன ராணுவத்தினர் செல்லவில்லை. எங்களது பிரதேச நடவடிக்கைகளைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம்.

இதுகுறித்து இந்தியாவிடம் தெளிவுபடுத்திவிட்டோம். சீனப் பகுதியிலிருந்து இந்திய ராணுவத்தினர் உடனடியாக அவர்கள் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். அந்த நபர், வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்' என்று தெரிவித்தார். முன்னதாக, இந்திய ராணுவத் தளபதி, 'உள்நாட்டுப் போர் மற்றும் வெளிநாட்டுப் போர்களுக்குத் தயாராகவே உள்ளோம்' என்று தெரிவித்திருந்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close