Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பசிக்கு உணவளிப்பவர்'... இங்கிலாந்து ராணியால் கௌரவிக்கப்பட்ட இந்திய இளைஞர்!

வீணாகும் உணவுப்பொருள்களைச் சேகரித்து, ஒரு வேளை உணவுக்குக்கூட கஷ்டப்படும் பலருக்கும் உணவளித்து ஆதரவுக்கரம் நீட்டியவர் என்பதற்காக, இந்திய இளைஞர் ஒருவர் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அன்கிட் கவாட்ரா

டெல்லியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் அன்கிட் கவாட்ரா என்பவர், இந்தியா முழுவதும் உள்ள ஆதரவற்றோருக்கு உணவளித்து வருகிறார். தனது ‘ஃபீடிங் இந்தியா’ என்ற அமைப்பின்மூலம் ஆதரவற்றோர், நடைபாதையில் வசிப்போர், ஏழ்மையில் உள்ளோர் என அனைவருக்கும் உணவளித்துவருகிறார். நகரங்களில் நடக்கும் முக்கிய விழாக்களில், திருமண நிகழ்வுகளில் எனப் பலதரப்பட்ட நிகழ்வுகளின்போதும் மீதமாகும் உணவுப் பொருள்களைச் சேகரித்து இல்லாதவர்களுக்குக் கொடுத்துவருகிறார்.

அன்கிட் கவாட்ரா நடத்திவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம், முதலில் டெல்லியில் மட்டுமே செயல்பட்டுவந்தது. ஆனால், பல தன்னார்வலர்கள், நண்பர்களின் உதவியால் இன்று இந்தியா முழுவதும் உள்ள 43 நகரங்களில் இந்நிறுவனம் ஆதரவற்றவர்களுக்காக உணவளித்து உதவிவருகிறது. அன்கிட் கவாட்ராவின் இந்தச் சேவையை ஊக்குவிக்கும் விதமாக, பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் பெயரால் ஆண்டுதோறும் அளிக்கப்படும் சிறப்பு விருது இவருக்கு அளிக்கப்பட்டது.

முன்னதாக, ஐநா-வின் நீடித்த வளர்ச்சி இலக்கை முன்னெடுத்துச் செல்லும் இளைஞர்கள் படையில் இவரை இடம்பெறச்செய்து, அன்கிட் கவாட்ராவுக்கு மேலும் கௌரவம் சேர்த்துள்ளது ஐநா சபை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close