Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஈகுவேடார் நாட்டில் நிலநடுக்கம்...ஐந்து பேர் படுகாயம்!

ஈகுவேடார் நாட்டில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவேடார் நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 6.0 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ’ஈகுவேடாரில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மிதமான ஒன்றாகும். இதனால் சுனாமி வருவதற்கான வாய்ப்பு இல்லை’ என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஈகுவேடர் நாட்டில் போர்டோவெய்ஜோ என்ற பகுதியில் இருந்து வடமேற்கில் இருக்கும் பசிபிக் பெருங்கடலின் அடியில் மையம் கொண்ட நிலநடுக்கம் அண்டை நகரங்களைத் தாக்கியுள்ளது. லேசான நிலநடுக்கம் என்பதால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லையென அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும், கட்டடங்கள் இடிந்து விழுந்து பலத்த சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close