Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காரில் முந்த முயன்றதால் இளம் பெண் சுட்டுக் கொலை!

சாலையில் ஒரே வரிசையில் செல்ல முயன்றதால், மாணவி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், பென்சில்வேனியாவில் நடந்தது.  

Road Rage


பென்சில்வேனியாவில், பியானசா நிகோல் ராபர்சன் என்ற 18 வயது இளம் பெண், தனது காரில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையின் ஒரு வரிசையில் செல்ல முயன்றிருக்கிறார். அப்போது, டேவிட் டேஸ்பர் என்பவரும் தனது ட்ரக் வண்டியில் அதே வரிசையில் செல்ல, இருவருக்கும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த டேவிட், தனது  துப்பாக்கியால் அந்த இளம் பெண்ணின் தலையில் சுட்டுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது வாகனம் நிலை தடுமாறி மரத்தில் மோதி நின்றது.

இந்தச் சம்பவத்தில், டேவிட் தனது வாகனத்தை நிறுத்தாமல் சென்றுவிட்டார். எனினும் சாலையோர கேமராக்களில் பதிவான காட்சிகளைவைத்து, டேவிட்டை போலீஸார் கைதுசெய்து, பல்வேறு பிரிவுகளில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அவரிடமிருந்த துப்பாக்கியையும் பறிமுதல்செய்தனர். கடந்த 2015-ம் ஆண்டு முதல் டேவிட், அனுமதி பெற்ற துப்பாக்கியை வைத்திருக்கிறார்  என்பது குறிப்பிடத்தக்கது. 'இது மிகவும் கொடூரமான சம்பவம்' என்று போலீஸார் கூறியுள்ளனர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement