மீண்டும் ஏவுகணைச் சோதனை நடத்தி அச்சுறுத்தும் வட கொரியா... பொறுமை இழந்த ட்ரம்ப்!

வட கொரியா மீண்டும் ஓர் ஏவுகணைச் சோதனையை நடத்தியுள்ளதால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொறுமை இழந்து, ட்விட்டரில் காட்டமான கண்டனப் பதிவு செய்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப்

இன்னும் சில நாள்களில் ஜி-20 மாநாடு நடக்க உள்ள நிலையில், வட கொரியா புதிய ஏவுகணைச் சோதனையை நடத்தியுள்ளது. வட கொரியாவின் மேற்குப் பகுதியான பாங்கியானிலிருந்து இந்தப் புதிய ஏவுகணைச் சோதனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஏவுகணை, கண்டம்விட்டு கண்டம் பாயக்கூடிய திறன் படைத்தது என்றும் யூகிக்கப்படுகிறது. இந்தச் சோதனைக்கு, உலக நாடுகள் பலவும் கண்டனங்களைத் தெரிவித்துவந்தாலும், வட கொரியாவின் இந்தத் தொடர் நடவடிக்கையை எவராலும் தடுக்க முடியவில்லை. 

இதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 'வட கொரியா மீண்டும் ஓர் ஏவுகணைச் சோதனையை நடத்தியுள்ளது. வட கொரிய அதிபருக்கு வாழ்க்கையில் வேறு எதுவும் வேலையே இல்லையா. தென் கொரியாவும் ஜப்பானும் இந்தத் தொடர் ஏவுகணைச்  சோதனையைப் பொறுத்துக்கொள்வது ஆச்சர்யமாக உள்ளது. சீனா, இந்தச் சம்பவம்குறித்து வட கொரியா மீது மிகவும் கடுமையான நடவடிக்கை எடுத்து, இந்த மதிகெட்ட வேலைக்கு முடிவு கட்டுமா என்று பார்க்கலாம்' எனத் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!