வெளியிடப்பட்ட நேரம்: 02:40 (05/07/2017)

கடைசி தொடர்பு:02:40 (05/07/2017)

வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை!

அமெரிக்காவின் போர் மிரட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் வடகொரியா ராணுவ அணிவகுப்பு நடத்தியது. புதிய ஏவுகணைகள் அறிமுக மிகப் பிரமாண்டமாக நடந்தது. இதைதொடர்ந்து, அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக வடகொரியா நேற்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்திருக்கிறது. இதற்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. வட கொரியா, சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எதிர்ப்பை மீறி, அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. அந்நாட்டின் மீது, ஐ.நா சபை பொருளாதார தடை விதித்துள்ள போதும், அதை வடகொரியா பொருட்படுத்தவில்லை. இந்நிலையில்தான் மீண்டும் வடகொரியா நேற்று ஏவுகணை சோதனையை நடத்தியிருக்கிறது.