Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திமிரும் வடகொரியா... எச்சரிக்கும் அமெரிக்கா... என்ன சொல்கிறது ஐநா..?

அமெரிக்காவின் எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல், வட கொரியா மீண்டும் நடத்திய ஏவுகணைச் சோதனையால் ஐநா-வின் தலையீட்டை தற்போது எதிர்பார்க்கிறது அமெரிக்கா.

வடகொரியா

அமெரிக்காவுக்கு நெருக்கடிகொடுக்கும் விதமாக, வட கொரியா சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைச் சோதனை செய்திருக்கிறது. முன்னதாக, அமெரிக்காவின் போர் மிரட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், கடந்த ஏப்ரல் மாதம் வட கொரியா ராணுவ அணிவகுப்பு நடத்தியது. புதிய ஏவுகணைகளின் அறிமுகமும் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.  தொடர்ச்சியாக, சர்வதேச அளவில் பல நாடுகளின் கண்டனங்களையும் சம்பாதித்து வருகிறது வட கொரியா.

சர்வதேச நாடுகள் மற்றும் ஐநா சபையின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதச் சோதனைகளை நடத்திவருகிறது வட கொரியா. அந்த நாட்டின் மீது, ஐநா சபை பொருளாதாரத் தடை விதித்துள்ளபோதும், அதை வட கொரியா பொருட்படுத்தவேயில்லை. இந்நிலையில், எல்லை மீறும் வட கொரியாவின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க, உடனடியாக ஐநா. சபையைக் கூட்ட வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை வைத்துள்ளது.

அமெரிக்காவின் சுதந்திர தினக் கொண்டாட்டம் நேற்று நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், வட கொரியாவின் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணைச் சோதனை, அமெரிக்காவுக்கு வட கொரியா விடும் நேரடிச் சவாலாகவே கருதப்படுகிறது. தற்போது, அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று, ஐநா சபை இன்று கூடுவதற்கு அதிக வாய்புள்ளதாகவே தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், ஐநா -வின் பதிலுக்காக உலக நாடுகள் காத்திருப்பதாகவே தெரிகிறது, குறிப்பாக அமெரிக்கா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close