மாசுபாட்டைக் குறைக்க நடவடிக்கை: இரு சக்கர வாகனங்களுக்குத் தடை விதிக்கவுள்ள நாடு!

சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதற்காக வருகிற 2030-க்குள் இரு சக்கர வாகனங்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்கவுள்ளது வியட்நாம்.

இரு சக்கர வாகனம்

தென்கிழக்கு ஆசிய நாடுகளுள் ஒன்றான வியட்நாம் தங்கள் நாட்டில் நிலவும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க புதியதொரு திட்டத்தை அமல்படுத்த உள்ளது. வியட்நாம் நாட்டில் குறிப்பாக அந்நாட்டின் தலைநகர் ஹனாய்-ல் காற்று மிகவும் மாசடைந்து, சுற்றுச்சூழல் அதிகப்படியாக சீர்கெட்டு இருந்ததை அந்நாடு கண்டுபிடித்துள்ளது. ஆய்வுக்கு பின்னரான முடிவுகளைப் பார்த்த அந்நாட்டு அரசு தீர்வைத் தேடி துரிதகதியில் தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது.

முதல் கட்ட நடவடிக்கையாக வருகிற 2030-ம் ஆண்டிற்குள் இரு சக்கர வாகனங்களை முற்றிலுமாகத் தடை விதிக்கவுள்ளது வியட்நாம். அங்கு கார்களை விட இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கைதான் அதிகமாம். இதனாலேயே போக்குவரத்து நெருக்கடிகளும், மாசுபாடும் அதிகரிப்பதாக அந்நாடு கருதுகிறது. இதற்கு மாற்றாகப் பொதுப்போக்குவரத்தை மக்கள் மத்தியில் அதிகப்படுத்த முயற்சித்து வருகிறது வியட்நாம். நகர்ப்புறங்களில் ரயில் தண்டவாளங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. விரைவில் இச்சேவை நடைமுறைக்கு வரும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!