புர்ஹான் வானி நினைவுப் பேரணி... அனுமதி திடீர் ரத்து!

இங்கிலாந்தில் நடைபெறவிருந்த புர்ஹான் வானி நினைவுப் பேரணிக்கு தந்த அனுமதியை பிரிம்மிங்ஹாம் மாநகர கவுன்சில் ரத்து செய்துள்ளது.

Burhan Wani rally cancelled in Birmingham

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி கடந்த ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் காஷ்மீரில் பிரிவினைவாத கருத்துகளை முன்வைத்து வந்தவர். புர்ஹான் வானி கொல்லப்பட்டதையடுத்து, காஷ்மீரில் பெரிய அளவில் கலவரம் நடைபெற்றது. மேலும் கடந்த ஒரு வருட காலமாகவே காஷ்மீரில் தொடர் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், புர்ஹான் வானி கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு, ஜூலை 8-ம் தேதி இங்கிலாந்தில் உள்ள பிரிம்மிங்ஹாமில் அமைதிப் பேரணி நடத்த அனுமதி பெறப்பட்டது. ஆனால், பிரிம்மிங்ஹாம் மாநகர கவுன்சில் அனுமதியை திடீரென்று ரத்து செய்துள்ளது. மேலும், பேரணி குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட புகைப்படங்களில், காஷ்மீர் பிரிவினைவாத கருத்துகள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து இந்தியாவின் தரப்பில் இதுகுறித்து இங்கிலாந்து அரசாங்கத்திடம் முறையிடப்பட்டது. இதனால்தான் பேரணி தடை செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!