இஸ்ரேலில் மோடிக்கு நினைவுப் பரிசு!

மோடி

ஸ்ரேல் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்த நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு நினைவுப் பரிசு அளித்தார்.

அரசுமுறைப் பயணமாக இஸ்ரேலுக்குச் சென்றுள்ள மோடி, அங்கே பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவுக்கு, மோடி நினைவுப் பரிசுகளை அளித்தார். 9 மற்றும் 10-ம் நூற்றாண்டில் இந்தியாவில் யூதர்கள் வாழ்ந்ததற்குச் சான்றாகப் பொறிக்கப்பட்டுள்ள வரலாற்று நினைவு தாமிரத் தகடுகளை அவர் வழங்கினார். இதையடுத்து மோடிக்கு, நேதன்யாஹு பிரிட்டிஷ் ராணுவத்தில் ஒரு பிரிவாக இருந்த இந்திய ராணுவ வீரர்கள் இருக்கும் புகைப்படத்தைப் பரிசாக அளித்தார். பெஞ்சமின் நேதன்யாஹு தனது இல்லத்தில் மோடிக்கு அளித்த தனிப்பட்ட விருந்தின்போது அந்தப் புகைப்படத்தைப் பரிசாக அளித்தார். மோடியின் ட்விட்டர் பக்கத்திலும் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோன்று மோடி, கடந்த சில நாள்களுக்கு முன்பு நெதர்லாந்துக்குச் சென்றபோது அந்த நாட்டுப் பிரதமர் மார்க் ரட்டே, அவருக்கு அழகான சைக்கிள் ஒன்றைப் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!