வெளியிடப்பட்ட நேரம்: 11:59 (06/07/2017)

கடைசி தொடர்பு:11:59 (06/07/2017)

'ராணுவத்தைத் திரும்பப் பெறுங்கள், பேச்சுவார்த்தை அப்புறம்'- இந்தியாவுக்கு சீனா நிபந்தனை

பூட்டான் எல்லையில் இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையில் பிரச்னை நிலவிவரும் நிலையில், புதிய நிபந்தனையை இந்தியாவுக்கு விதித்துள்ளது, சீனா. 

சீன தேசியக் கொடி

இந்தியா-பூட்டான் எல்லைக்குள் சீனா அத்துமீறி நுழைந்து, சிக்கிம் செக்டாரில் சாலை கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுவருகிறது என்பதுதான் இந்தியாவின் குற்றச்சாட்டு. ஆனால், இந்தியாதான் இரு நாடுகளுக்கும் இடையில் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டுவருகிறது என்று சீனா குற்றம் சுமத்தியுள்ளது. 

இதையடுத்து சீனத் தரப்பு, 'இப்போது இந்தியா - சீனாவுக்கு இடையில் பூட்டானில் நிலவிவரும் பிரச்னைக்கு ஒரு தீர்வு காண வேண்டுமென்றால், முதலில் இந்தியா, பூட்டான் எல்லையில் உள்ள ராணுவப் படையை எந்தவித நிபந்தனைகளுமின்றி உடனே திரும்பப் பெற வேண்டும். இப்போது, பூட்டான் பக்கத்தில் இந்தியா சொந்தம் கொண்டாடும் நிலப் பகுதி அவர்களுடையது என்று சொல்வதற்கு எதிராகவும் அது பாரம்பர்யமாக எங்களுக்குச் சொந்தமானது என்று கூறவும் அதிக ஆதாரங்கள் இருக்கின்றன. எனவே, அந்த இடத்தில் எந்த விஷயத்தை இந்தியா செய்தாலும் அது, சீனா இறையாண்மைக்கு எதிரானது' என்று கூறியுள்ளது.