Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹெலிகாப்டரில் ஏறும்முன் ட்ரம்ப்பின் நெகிழ்ச்சி செயல்!

ட்ரம்ப்

'அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகவும் கோபக்காரர்; பத்திரிகையாளர்களை திட்டுபவர்; சரியாக கைகொடுக்கத் தெரியாதவர்' என்று விமர்சனங்கள் வருவது உண்மைதான். என்றாலும், ட்ரம்ப் நேற்று ஹெலிகாப்டரில் ஏறுவதற்குமுன் செய்த செயல் அனைவரையும் நெகிழவைத்தது. 'அட, ட்ரம்ப் இவ்வளவு நல்லவரா இருக்காரேப்பா' என்று அனைவரையும் 'வாவ்' சொல்லவைத்திருக்கிறது.

ஜெர்மனியின் ஹம்பர்க்கில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பிய ட்ரம்ப், ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் ஹெலிகாப்டர் தளத்துக்கு வந்து ஹெலிகாப்டரில் ஏற முயன்றபோது இந்தச்சம்பவம் நடந்தது. பலத்தக் காற்று வீசியதால், ட்ரம்ப் கட்டியிருந்த  டை, தலைமுடி அனைத்தும் பறந்தவாறே அவர் நடந்து வந்தார். ஹெலிகாப்டர் முன்பு நின்றுகொண்டிருந்த கடற்படை வீரர் ஒருவரின் தொப்பி கீழேவிழுந்து கிடப்பதை ட்ரம்ப் கவனித்தார். உடனடியாக அவர் அந்தத் தொப்பியை எடுத்து, அந்த வீரரின் தலையில் அணிவித்தார். இதனை அங்கு கூடியிருந்த அதிகாரிகள் உள்பட யாரும் எதிர்பாக்கவில்லை. இந்த ஆச்சர்யத்திலிருந்து அனைவரும் மீள்வதற்குள் அந்தத்தொப்பி காற்றில் மீண்டும் பறந்தது. அதனைத் துரத்திப்பிடித்துவந்த ட்ரம்ப், அந்த வீரரிடம் கொடுத்துவிட்டு ஹெலிகாப்டரில் ஏறியதால், அந்த இடத்தில் ஆச்சர்யத்துடன் கூடிய பரபரப்பு நிலவியது.

ட்ரம்ப்-ன் இந்தச் செயல் அடங்கிய வீடியோ ஒரேநாளில் வைரலாகி ஐந்து மில்லியன் 'வியூஸ்'-களைத் தாண்டியுள்ளது. ட்ரம்ப் குறித்து ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அவரது இந்தச்செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. 2013-ம் ஆண்டு மே மாதம் முன்னாள் அதிபர் ஒபாமா இதேபோன்றதொரு செயல்மூலம் அனைவரையும் நெகிழச் செய்தார். அவசரமாக ஹெலிகாப்டரில் ஏறச்சென்ற ஒபாமா, அங்குள்ள பாதுகாப்பு வீரரின் சல்யூட்-ஐ கவனிக்காமல் முதலில் உள்ளே சென்றுவிடுவார். விமானத்திற்குள் ஏறிய பின்னர் விமானியிடம் கொஞ்சம் காத்திருக்குமாறு கூறிவிட்டு மீண்டும் கீழே இறங்கிவந்து அவருக்கு சல்யூட் வைத்து கைகுலுக்கி விட்டுச்செல்வார். ட்ரம்ப்-ன் தற்போதைய செயலும் ஒபாமாவின் செயல்போன்றதொரு காட்சியாக அமைந்துள்ளது.

 

சமீபத்தில் போலந்து நாட்டில் ட்ரம்புக்கு அந்நாட்டு அதிபரின் மனைவி அகதா கார்ன்ஹவுசர்-துடா கைகொடுக்காமல் தவிர்த்து, பின்னர் கைகொடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால், ஒரேவாரத்தில் மீண்டும் இப்படி ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தின் மூலம் ட்ரம்ப் பற்றிய வீடியோ வைரலாகியுள்ளது. ஆனால், இந்தமுறை நடந்த சம்பவம் ட்ரம்ப்-க்கு பாசிட்டிவாக அமைந்துள்ளது. தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்த ட்ரம்ப், 'இப்படியெல்லாம் கூட செய்வாரா?' என்று அனைவரையும் கேட்கவைத்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். "மிஸ்டர் ட்ரம்ப், குழந்தை மனசு பாஸ் உங்களுக்கு...!"

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close