கனடா வனப்பகுதியில் காட்டுத் தீ! - பொதுமக்கள் வெளியேற்றம்

கனடா நாட்டில் வரலாறு காணாத வெப்பத்தால் காட்டுத் தீ பரவிவருகிறது. இதனால், பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கனடாவில் காட்டுத் தீ

கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் அப்பகுதியிலுள்ள குடியிருப்பு சார்ந்த வனப்பகுதிகளிலும் காட்டுத் தீ அடிக்கடி ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் அங்கு 180-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ பரவியது. இதில் 20-க்கும் அதிகமான பகுதிகள், மக்கள் நெருக்கம் நிறைந்த குடியிருப்புச் சார்ந்த வனப்பகுதிகள். இதனால், அப்பகுதியைச் சேர்ந்த ஏழாயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர்.

தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதுடன், ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தண்ணீர் தெளித்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. வெப்பத்தின் தாக்கம் இன்னும் சில நாள்களுக்கு நீடிக்கும் என வானிலை மையம் தெரிவிருக்கிறது. எனவே, 14 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!