வெளியிடப்பட்ட நேரம்: 19:29 (10/07/2017)

கடைசி தொடர்பு:19:49 (10/07/2017)

சீன அதிபருடனான பிரதமர் மோடி சந்திப்பு; சீனா மறுப்பு..!

ஜெர்மனியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின் போது இந்தியப் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையே சந்திப்பு நடைபெறவில்லை என்று சீனா தெரிவித்துள்ளது. 

ஜெர்மன் நாட்டின் ஹம்பர்க் நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜி-20 மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்த 'மாநாட்டின் இடையே சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் பிரதமர் மோடியும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துக் கொண்டனர். பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் சந்தித்துப் பேசவுள்ளனர்' என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இது குறித்து தெரிவித்த சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜெங் சுவாங், 'ஜி-20 மாநாட்டின் போது இந்தியப் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையே சந்திப்பு நடைபெறவில்லை. டோகாலம் எல்லைப் பகுதியிலிருந்து இந்தியா தனது படையைத் திரும்பப் பெற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெறும்' என்று தெரிவித்துள்ளார்.