ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாகத் தகவல்! | IS chief Abu Bakr al-Baghdadi is dead, says sources

வெளியிடப்பட்ட நேரம்: 23:09 (11/07/2017)

கடைசி தொடர்பு:08:58 (12/07/2017)

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாகத் தகவல்!

ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்டதாக சிரிய மனித உரிமை அமைப்பு தகவல் கூறியுள்ளது.

அபு பக்கர் அல்-பக்தாதி

கிழக்கு சிரியாவில் தேர் அஸ் ஸோர் பகுதியில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சிரிய மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை இதுவரை சர்வதேச ஊடகங்கள் ஊர்ஜிதப்படுத்தவில்லை. மேலும், ஈராக் தரப்போ குர்தீஷ் தரப்போ இதுவரை இந்தத் தகவலை உறுதிப்படுத்தவில்லை. இதற்கு முன்னரும் பக்தாதி கொல்லப்பட்டதாகப் பலமுறை தகவல் வந்துள்ளது. கடைசியாகக் கடந்த ஜூன் மாதம் கூட ரஷ்ய ராணுவத் தரப்பு, 'பக்தாதியைக் கொன்றுவிட்டோம்' என்று கூறியது. ஆனால், இதை அமெரிக்க தரப்பே மறுத்தது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு மொசூலில் இருக்கும் ஒரு மசூதியில் அவர் பொதுத் தளத்தில் தோன்றினார். அதன் பின்னர் அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் யாருக்கும் சரியாகத் தெரியவில்லை.