பயங்கரவாதத்துக்கு எதிரான ஒப்பந்தம்: அமெரிக்கா- கத்தார் இடையே கையெழுத்தானது! | U.S. and Qatar signed a pact against terrorism

வெளியிடப்பட்ட நேரம்: 14:43 (12/07/2017)

கடைசி தொடர்பு:14:43 (12/07/2017)

பயங்கரவாதத்துக்கு எதிரான ஒப்பந்தம்: அமெரிக்கா- கத்தார் இடையே கையெழுத்தானது!

அமெரிக்காவும் கத்தாரும் பயங்கரவாதத்தை எதிர்த்து, இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

அமெரிக்கா- கத்தார்

தீவிரவாதத்துக்குத் துணைபுரிவதாகக் குற்றம்சாட்டப்பட்டு கத்தார், வளைகுடா நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அண்டை வளைகுடா நாடுகளுடன் கத்தாருக்கு நிலவி வந்த பிரச்னை அதிகரித்துக் காணப்பட்டது. இப்பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் கத்தார், அமெரிக்காவுடன் தீவிரவாதத்துக்கு எதிரான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் தோஹா சென்று கத்தார் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல் ரகுமானை சந்தித்தார். இரு அமைச்சர்களும் பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதைத் தடுப்பது தொடர்பாக விவாதித்தப் பின்னர் பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் பயங்கரவாதத்தை ஒழிக்கும் முயற்சியாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகளுக்கும் தொடர்ச்சியாக செல்லவிருக்கிறார்.