கத்தாருடன் ஒப்பந்தம் செய்ய ஏன் மற்ற நாடுகள் முன்வரவில்லை...!

'கத்தார்-அமெரிக்கத் தீவிரவாத நிதித் தடுப்பு ஒப்பந்தம் ஒரு நாளும் தங்கள் கவலைகளுக்குப் போதாது' என்று கூறி நான்கு வளைகுடா நாடுகளும் கத்தாருடன் சமாதானமாகப் போக மறுத்துள்ளன. 

அமெரிக்க செயலர் ரெக்ஸ் டில்லர்சன்னுக்கு சவூதி, யு.ஏ.இ (ஐக்கிய அரபுக் குடியரசு), பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நான்கு நாடுகளையும் சமாதான பேச்சுவார்த்தைக்குச் சம்மதிக்கச் செய்வது பெரும் சவாலாக அமைந்துள்ளது. இந்த நான்கு நாடுகளும் வலியுறுத்தியிருந்த கோரிக்கைகளின் அடிப்படையில் தான் கத்தாருடன் ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தன. அந்த கோரிக்கைகளில் ஈரானுடனான தொடர்பைத் துண்டித்தல், அல்-ஜசீரா தொலைக்காட்சியை மூடுதல், துருக்கியின் ராணுவ முகாமை மூடுதல், கத்தாரில் வசிக்கும் தீவிரவாத குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களைக் கண்டித்தல் போன்ற 13 கோரிக்கைகள் உள்ளடங்கியுள்ளன. 

 ரெக்ஸ் டில்லர்சன்

 

கத்தாரும் அமெரிக்காவும் கூட்டாளிகள் என வளைகுடா நாடுகள் விமர்சிக்கின்றனர். மேலும், அமெரிக்காவின் பெரிய ராணுவ முகாம் கத்தாரில் அமைந்துள்ளது. எனவே, இந்த நான்கு நாடுகளுக்கும் கத்தாரின் மீது நம்பிக்கை குறைவு ஏற்பட்டுள்ளது. தவிர, 'அமெரிக்காவின் அணுகுமுறை கத்தாருக்கு மட்டுமே சாதகமாக இருப்பதுபோல தெரிகிறது' என அந்நாடுகளின் தரப்பிலிருந்து ஆட்சேபனையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 'கத்தாரை விலக்கி வைத்தால் அந்நாடு ஈரானுடன் நெருக்கமாவதற்கு வாய்ப்பு இருப்பதால், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும்’ என அமெரிக்கா கவலை கொள்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!